Header Ads

Breaking News
recent

திருமலை ஊடகவியலாளரை தாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - சிலோன் மீடியா போரம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்


திருகோணமலை அக்போபுர பகுதியில் விபத்து செய்தி சேகரிக்க சென்ற ஐ.ரி.என் ஊடகவியலாளர் இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளதையும் அவரது ஒளிப்பதிவு கமரா பறிக்கப்பட்டதையும் வன்மையாக கண்டிப்பதாக சிலோன் மீடியா போரம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி குறித்த ஊடகவியலாளருக்கான நியாயத்தை பெற்றுக்கொடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.

சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் மற்றும் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் ஆகியோர் ஒப்பமிட்டு குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதானது,

நாட்டின் அபிவிருத்தி மற்றும் இன்னோரன்ன செய்திகளை சமூகத்திற்கும் மக்களுக்கும் வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு வாய்ந்த பணியை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மேற்கொள்ளும் ஊடகவியலாளர் மீது இவ்வாறான கோழைத்தனமான தாக்குதல் மேற்கொள்வதானது ஊடகத்தையும் ஊடகவியலாளர்களையும் அவமதிக்கின்ற செயலாகவே கருத வேண்டியுள்ளது. 

இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடுவோரை எதுவித தயவு தாட்சனியம், அந்தஸ்து பாராது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு அரசாங்கத்திடம் காணப்படுவதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது
Powered by Blogger.