Header Ads

Breaking News
recent

நாளை புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் நாளை மறுதினத்திலிருந்து உயர் தரப்பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!!!!

நாளை ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் நாளை மறுதினத்திலிருந்து உயர் தரப்பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களே...

தமது பிள்ளைகளை முகக்கவசம் அணிந்தவர்களாக பரீட்சைக்கு அனுப்புங்கள்.

பரீட்சை மண்டபத்தில் நுழைய முன்னரும், வெளியேறும் போதும் கைகளை சவர்க்காரமிட்டு நன்கு கழுவச் சொல்லுங்கள்.

இயன்றவரை நீங்களே அழைத்துச் சென்று விடுங்கள். பரீட்சை முடிந்த பின் நீங்களே மீண்டும் அழைத்து வாருங்கள்.

தமது பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொடுத்து அனுப்புங்கள். ஏனைய மாணவர்களிடம் எதனையும் இரவல் வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் கைகளை சவர்க்காரமிட்டுக் கழுவி உடனடியாக ஆடைகளை மாற்றி விடுங்கள்.

பிள்ளைகளுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவை மறக்காமல் கொடுத்து விடுங்கள்.

பரீட்சை ஆரம்பமாக முன்னரோ அல்லது முடிவடைந்த பின்னரோ கூட்டம் கூட்டமாக கூடி நிற்க வேண்டாமென்று பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லுங்கள்.

அனைத்துப் பிள்ளைகளும் தத்தமது பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிட சகலருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திப்பதோடு MAX தமிழ் குழுமம் சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் .


Powered by Blogger.