Header Ads

Breaking News
recent

A9 வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்!!!!


ஏ 9 வீதியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நோக்கிய திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் வலது புறம் திருப்ப முற்பட்ட வேளை அதே திசையில் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த கார் மோதியதாலேயே விபத்து நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த சண்முகம் கஜேந்திரன் (34) என்பவரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Powered by Blogger.