Header Ads

Breaking News
recent

ஹெரோயினுடன் ஒருவர் கைது : திருகோணமலை


Copy (நிருபர் கீத்)
திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிறீன் வீதியின் ஹெரோயினுடன் ஒருவரை நேற்று (13) மாலை கைது செய்ததாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து எண்பது மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. 

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவர் 31 வயதுடையவர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

துறைமுகப் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து துறைமுகப் பொலிஸாருக்கு பொறுப்பாக உள்ள பிரதேசம் எங்கும் தேடுதல் வேட்டை மேற்கொண்ட பொலிஸார் கிறீன் வீதியில் உள்ள கைது செய்யப்பட்டவரின் தாயின் வீட்டிற்கு முன் தரித்து நின்ற ஸ்கூஊட்டி இருசக்கர வாகனத்தை சோதனை மேற்கொண்டதில் வாகனத்தில் இருக்கையின் அடிப்பாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று விற்பனைக்கு ஹெரோயின் எடுத்து வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்ததாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.