வாகன வருமான அனுமதி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!!!!
சப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக்குறித்த அச்சநிலையைத் தொடர்ந்து, பொதுமக்கள் அதிகம் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளைமுதல் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை இவ்வாறு வாகன வருமான அனுமதி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
