ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் கடைகளை உடைத்து திருடிய கடற்படை அதிகாரி !!!!!
கொழும்பு- கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் அமைந்துள்ள பல கடைகளை உடைத்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திடிய குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் (43 வயது) கண்டி, மதுரட்ட பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கடற்படையில் 22 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் சந்தேக நபர் ஓய்வு பெற்ற பின்னர் கட்டுநாயக்கவுக்கு திரும்பி வந்து தனியார் பாதுகாப்பு சேவைகளில் சேர்ந்து ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறாக ஊரடங்கு பகுதிகளில் கடைகள் உடைத்து திருட்டு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
