Header Ads

Breaking News
recent

கிரீன் ஃபீல்ட் வீட்டுத்திட்டத்தில் நிலவிவந்த சுகாதார பிரச்சனைகளுக்கு நேரடி தீர்வு : சுகுணன்


கல்முனை கிரீன் ஃபீல்ட் வீட்டுத்திட்டத்தில் பல வருட காலமாக நிலவிவந்த பல சுகாதார பிரச்சனைகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைப்பதற்காக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி றிஸ்னி அவர்களின் வேண்டுகோளின் பெயரில் அங்கு மாவட்ட வைத்திய அதிகாரி சுகுணன் அவர்கள் நேரடி விஜயம் மேற்கொண்டார்.


மேலும் தொற்றுநோய் பிரிவின் உயர் அதிகாரி வைத்தியர் ஆரிப்  இன்னும் பல அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டிருந்தனர் (16) வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டதுடன் வெகுவிரைவில் இதற்கான தீர்வினையும் பெற்றுத்தருவதாக பொருந்திக் கொண்டனர்.

அத்துடன் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பொது பணியாக பாரிய சிரமதான பணியும் அங்கு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதற்கு நன்றி கூறும் வகையில் அங்கு உள்ள அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டனர் இனிவரும் காலங்களில் அங்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நிர்வாகக் குழுவும் ஏற்படுத்த வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது.
Powered by Blogger.