Header Ads

Breaking News
recent

அரச பேருந்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி : பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல்!!!


காத்தான்குடி நகர முதல்வர் SHM.அஸ்பர் விடுக்கும் கொரோனா தொடர்பான அவசர அறிவித்தல்.

கடந்த (23) வெள்ளிக்கிழமை இரவு 12.00 மணியளவில் கொழும்பிலிருந்து புறப்பட்டு மறுநாள் (24) சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் காத்தான்குடி நகரை வந்தடைந்த WP-NB 8844 இலக்கமுடைய காத்தான்குடி CTB டிப்போக்கு சொந்தமான பஸ் வண்டியில் பயணம் செய்த பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

077-5129357 காத்தான்குடி பொலிஸ் அல்லது 077-7381713 பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரை உடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .

மேற்படி பஸ் வண்டியில் பயணம் செய்த களுவாஞ்சிக்குடியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே மேற்படி அறிவித்தல் விடுக்கப்படுகிறது.

குறிப்பாக கதுருவலை பஸ் நிலையத்திலிருந்து ஒருவர் மேற்படி பஸ் வண்டியில் பயணம் செய்து காத்தான்குடி மர்க்கஸ் பஸ் தரிப்பிடத்தில் இறங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பொது மக்கள் உடனடியாக தகவல்களை வழங்குமாறும் அதே நேரம் சுகாதார நடைமுறைகளை பேணி பாதுகாப்பாக நடந்து கொள்ளுமாறும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.


Powered by Blogger.