Header Ads

Breaking News
recent

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு!


(ஹாசீம் சஜீத் - இறக்காமம்)
கொக்கட்டிச்சோலை முனாயக்காடு களப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று (21) அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் ரி 56 துப்பாக்கி ஒன்றும் மற்றும் 50 ரவைகள் மீட்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுணதீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மட்டக்களப்பு தளபதி உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளின் பெரேராவின் ஆலோசனைக்கமைய வவுணதீவு விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி டபிள்யூ. ஜீ.எஸ்.காயப்பிரிகா தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான நேற்று (21) அதிகாலையில் குறித்த பகுதியில் உரைப்பை ஒன்றில் சுற்றப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் ரி.56 ரக துப்பாக்கி ஒன்றும் 2 மகசீன்களும் மற்றும் 50 ரவைகளையும் மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை கொக்கட்டிச்சோலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.