Header Ads

Breaking News
recent

முடக்கப்பட்டது பலப்பிட்டிய பிரதேசம் !!!!!



வைப்பகப்படம் 

பலப்பிட்டிய – கட்டுவில பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட பதினைந்து பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட கொழும்பு கப்பல்துறை ஊழியர் ஒருவர் குறித்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 50 பேர் மீது மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கிடைக்கப் பெற்ற 34 பேரின் முடிவின் படி 15 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையைக் கருத்திற்கொண்டு கட்டுவில கிராம சேவகர் பிரிவுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Powered by Blogger.