காட்டு யானையின் தாக்குதலில் வயோதிப பெண் பலி!!!
(முஹம்மட் ஹாசில்)
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹலகம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த பெண், கஹட்டகஸ்திகிலிய-மீமின்னாவல, இஹலகம பகுதியைச் சேர்ந்த சுத்தாகே விமலாவத்தி (64) எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
