Header Ads

Breaking News
recent

STF உட்பட 11 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!!


பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட 11 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று (30) காலை தனியார் தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் 400 இற்கு அதிகமான குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 52 வயதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று மாலை கொன்பரன்ஸ் ஒன்றில் கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரின் மரண பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவாதாகவும் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் காரணத்தை கூற முடியும் என தெரிவித்த அவர் குறித்த அதிகாரி பியகம பகுதியில் உள்ள திறமையான அதிகாரி ஒருவர் எனவும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.