ஊரடங்குச் சட்டம் தொடர்பில் போலி செய்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது!!!!
நாடளாவிய ரிதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக, போலி செய்திகளை பரப்பிய குற்றச்சாட்டில், 18 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இவவவிடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நாடளாவிய ரீதியில் ஊடரங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டு போலி தகவல் பரப்பப்பட்டது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவை கோடிட்டும் ஊடகமொன்றின் இலட்சினையை பயன்படுத்தியும் இந்த செய்தி பரப்பப்பட்டது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மீடிய கொட பிரதேசத்தை சேர்ந்த 18வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நாளையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு எதிராக தண்டனை சட்டத்தின் கீழும், கணிணி சார்ந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக வழக்கு தொடர்ப்படவுள்ளது” என பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
