Header Ads

Breaking News
recent

மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்து : இருவர் பலி!!

(ஹொரவப்பொத்தானை நஸீம்)
வவுனியா, மடுகந்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகிய மோட்டர் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (08) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி வேகமாக சென்ற மோட்டர் சைக்கிள் மழை காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து குறித்த இருவரது சடலங்களும் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், 

ஹொரவப்பொத்தானை வீரசோலை கிராமத்தை சேர்ந்த 41வயதுடைய முகமது மாஹீர் என்பவரும் மற்றும் நியாஸ் என்பவருமே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.