துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு ஆளும் தரப்பு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்!!!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆங்கில பத்தரிகையொன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.
இதற்கமைய. குறித்த கடிதத்தில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற ஆளும்தரப்பு நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போதே, குறித்த கடிதத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றுள்ளதாக குறித்த ஆங்கிலப் பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது
