முஸ்லிம் கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அவசர வேண்டுகோள்!!!
உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் உள்ள சகல குர்ஆன் மத்ரஸாக்கள், மக்தப்கள், அஹதிய்யா பாடசாலைகள் ,ஹிப்ழ் மத்ரஸாக்கள், அரபிக் கல்லூரிகள் அனைத்தையும் நாளை (05) முதல் மறு அறிவித்தல் வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது .
.
மேலும் மத்ரஸா விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை வீடுகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் மஸ்ஜித்கள் கோவிட் 19 ஒழுங்குகளை கடைபிடிக்கவும்.மேலும் நிலைமை சீராக பிரார்த்தனைகளில் ஈடுபடுங்கள் எனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலூல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம் . அஷ்ரப் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
