Header Ads

Breaking News
recent

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு : நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு




(முஹம்மட் ஹாசில்)
அரசினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டம், ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி தெரிவு செய்யப்பட்ட 83 பயிலுனர்களுக்கு முதற்கட்டமாக நியமனக்கடிதங்கள் நேற்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் தேசமான்ய A.R.A.ஹுசைன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கவனத்திற்கு கொண்டு சுகாதார வழிமுறைகளின் அடிப்படையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வட்டார அமைப்பாளரும், சமூக சேவையாளருமான A.M.A சியாம் ஹாஜியார் மற்றும் பயிலுனர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Powered by Blogger.