(எம்.சமீர்)கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் வாராந்த சந்தைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.திருகோணமலை நகர் பிரதேசம், புல்மோட்டை, சீனக்குடா, 5ஆம் கட்டை மற்றும் தம்பலகாமம் போன்ற இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், வர்த்தக நிலையங்கள் மீதும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.மேலும், வர்த்தகர்கள் தமது வியாபார நிலையங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணல் போன்ற சுகாதார நடைமுறைகளை பின்றுபற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை, அத்தியவசிய பொருட்களை கொள்வளவு செய்வதற்கு ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே வர வேண்டும் எனவும், அவ்வாறில்லாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது