திருக்கோவில் பொலிஸ் பிரிவில் ஏழு உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் ஜவர் கைது!!!!
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்கட்பட்ட பகுதிகளில் இருந்து ஏழு உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் ஜந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் பொலிஸ் நிலைய விசேட தகவல் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய புலனாய்வு தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜெயவீரவின் தலைமையிலான பொலிஸ் மேற்கொண்ட தேடுதலின் போது மேற்படி துப்பாகிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் ஜவரும் பொலிசாரினால் சனிக்கிழமை மாலை (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது திருக்கோவில் காஞ்சிரம்குடா தாண்டியடி பகுதிகளில் இருந்து உள்ளுரில் தயாரிக்கப்பட்ட ஏழு துப்பாக்கிகளும் அதற்கான சன்னங்கள் ரவைகள் ஈயம் மற்றும் வெடி மருந்துகள் என்பன பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த 11ந் திகதி ஞாயிற்றுக் கிழமை முதல் சனிக்கிழமை வரையான இரு வாரத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து இராணுவம் மற்றும் பொலிசாரினால் சுமார் 20 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



