சிகரெட் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!!!!
அனுராதபுரம் எப்பாவல பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெக்கிராவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிடுந்த சுமார் ஆயிரத்து 300 சிகரெட்டுகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
