Header Ads

Breaking News
recent

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!!!!


(மட்டக்களப்பு சரவணன்)
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் கொண்டு சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 4.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சந்திவெளி வைத்தியசாலை வீதி கடற்கரை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய தங்கவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் சந்திவெளி பகுதியில் வைத்து குறித்த நபர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கோண்டு வருகின்றனர்.
Powered by Blogger.