Header Ads

Breaking News
recent

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்.!


இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி கமிட்டாகி இருந்த நிலையில் எதிர்ப்புகள் கிளம்பியதால் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி நீக்கப் பட்டார். தமிழின துரோகியாக தமிழ் மக்களால் ஒதுக்கப் பட்ட முரளிதரன் தனது தரப்பில் இருந்து நியாயங்களை கூறிய போதும் மக்கள் கேட்பதாக இல்லை

விஜய் சேதுபதியை இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுக்கப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் விஜய் சேதுபதி எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார். இந்த நிலையில் விஜய் சேதுபதியை இந்த திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளும் படி முரளிதரன் கோரிக்கை வைத்தார்.

இதனை விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்ட நிலையில் படக்குழு விஜய் சேதுபதியை இந்த திரைப்படத்தில் இருந்து நீக்கியுள்ளது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு சில மிருகங்கள் பாலியல் ரீதியான மிரட்டல்கள் விடுத்துள்ளனர்.

ஈழத்தில் எத்தனையோ பெண்களை வன்கொடுமை செய்த போது குரல் கொடுக்காத பல மிருகங்கள் ஒரு திரைப்படத்தை எதிர்ப்பது புதிதாக இருக்கும் நிலையில் ஒரு பச்சிளம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாக கூறுவது கேவலமான செயல் என பலரும் திட்டி தீர்த்து வரும் நிலையில் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
Powered by Blogger.