தாங்க முடியாத பல் வலி, பல் சொத்தையா.....?
இன்றைய மருத்துவ குறிப்புகள் பகுதியில் பல் வலி மற்றும் சொத்தை பல்லை சரி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். முதலில் இவை வராமல் தடுக்கும் முறையை பார்க்கலாம். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் கொண்டு வாய் கழுவுங்கள், இப்படி செய்வதால் வாய் துர்நாற்றம் வீசுவது குறைவதுடன் சொத்தப் பல் பிரச்சனையும் வராது.
அடுத்து வேப்பம் குச்சி அதாவது வேப்பம் மரத்தில் பச்சையாக சிறிய குச்சி ஒன்றை எடுத்து வாரத்தில் இரண்டு முறை பல் தேய்க்க வேண்டும். ஏற்கனவே தேய்த்த பல்லை இதனால் தேய்க்கலாம், இப்படி செய்தால் எந்த காரணத்திற்காகவும் பல் வலி வரவே வராது,
அடுத்து மெல்லிய சுடு நீரில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வாய் கழுவி வந்தால் போதும், வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தை வரவே வராது. அதே போல் சீதாக்காய் இது சாதாரணமாக கிராமங்களில் கிடைக்க கூடிய ஒன்றாகும்.
இதன் இலைகள் மருத்துவ குணம் நிறைந்ததாகும், இதனை நன்றாக கசக்கி சாறு எடுத்து பஞ்சு துண்டு ஒன்றில் நனைத்து பற்களில் வைத்தால் பல் வலி தீர்ந்து விடும், அதே போல் சீதாகாயின் தோல்களை காயவைத்து எரித்து அதன் புகையை பற்களில் படும் படி இழுத்தாலும் பற்களில் உள்ள கிருமிகள் இறந்துவிடும்.
