Header Ads

Breaking News
recent

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை புலமைப்பரிசில் பரீட்சை!!!!


2020ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி நாளை(11) நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

புலமைப்பரிசில் தேர்வுக்கு இம்முறை 331,694 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், சிங்கள ஊடகத்தில் 248,072 மாணவர்களும், தமிழ் ஊடகத்தில் 83,622 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு - தேர்வுக்கு தேவையான சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.