Header Ads

Breaking News
recent

முகக்கவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்- மக்களுக்கு எச்சரிக்கை!!


முகக்கவசம் அணியாமல் விடுதியில் இருந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்- மக்களுக்கு எச்சரிக்கை!!

முகக்கவசம் அணியாமல் விடுதியில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளுபிட்டி பகுதியில் தங்கும் விடுதி ஒன்றில் முகக்கவசம் அணியாமல் இருந்த இளைஞர் மற்றும் யுவதியை பொலிஸார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவும் விதத்தில் செயற்பட்டார்கள் என அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குறித்த இருவரும் தாங்கள் கொரோனா தொற்று பரவும் விதத்தில் செயற்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து குறித்த வழக்கு ஜனவரி 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த இருவரும் மதிய உணவை உண்பதற்காக முகக்கவசம் அணியாமல் இருந்ததாக அவர்களது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் இருவரையும் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப் பிடத்தக்கது.
Powered by Blogger.