கிழக்கு மாகாணத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கிழக்கு மாகாணத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை 144ஆக அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு காத்தான்குடியில் இருவரும், கல்முனை அக்கரைப்பற்று பகுதியில் 10 பேரும், சாய்ந்தமருது பகுதியில் ஒருவருமாக மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
