Header Ads

Breaking News
recent

ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது!!

(முஹம்மட் ஹாசில்) 
2021 ஆம் ஆண்டுக்கான ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நேற்று(26) நிறைவேற்றப்பட்டது. 

ஹொரவபொத்தான பிரதேச சபையின் தலைவர் சாரு உதயங்க விஜேரத்னவினால் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று(26) சபையினருக்கு இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றது, இதில் ஆளும் மற்றும் எதிர் கட்சியினர் பல்வேறு நிறைகளைவும், குறைகளையும் சபையில் எடுத்து கூறினார். இவையனைத்தையும் செவிமடுத்த தவிசாளர் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளவதாக அறிவித்தார்.




மேலும் குறை, நிறைகளை ஏகமனதாக ஏற்றுக்கொள்வதால் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்படுவதாக சபையில் அறிவித்துவிட்டு இன்று(27) காலை 10 மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்து சபையிலிருந்து தவிசாளர் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் எழுந்து சென்றனர். 




பின்னர் எதிர் கட்சியினர் அவ்விடத்திலேயே வரவு செலவு திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதம் குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டு சபையிலிருந்து வெளியேறினர்.




இதேவேளை 2021 ஆம் ஆண்டுக்கான ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் கடந்த மாதம் 29 ஆம் திகதி முதற்தடவையாக முன்வைக்கப்பட்ட போது 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.