Header Ads

Breaking News
recent

இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 17,287 ஆக உயர்வு!!!


இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 17,287 ஆக உயர்வடைந்துள்ளது.

COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 704 பேர் நேற்று (15) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பேலியகொடை கொரோனா கொத்தணியில் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 13,788 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன

அதன்படி, கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பு-13 ஐ சேர்ந்த இருவர், கொழும்பு-12, கொழும்பு-15 மற்றும் பொரளையை சேர்ந்தவர்களே நேற்று உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 171 பேர் குணமடைந்துள்ளனர்

இதற்கிணங்க, தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,495 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 5,734 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Powered by Blogger.