Header Ads

Breaking News
recent

திருகோணமலை மாவட்டத்தில் 195 புள்ளிகளை பெற்று சாதனை!!!


(பதுர்தீன் சியானா)
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் கஜேந்திரன் கார்த்திகேயன் புலமைப்பரிசில் பரீட்சையில் 195 அதி கூடிய புள்ளிகளை பெற்றுள்ளார்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற கஜேந்திரன் கார்த்திகேயன் 195 புள்ளிகளை பெற்று கல்லூரிக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார்.




இதேவேளை 56 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.

இத்துடன் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

அதேநேரம் சென்ற வருடம் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் 197 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.