கொவிட் 19 தேசிய துஆப் பிரார்த்தனை நிகழ்வு!!!!!
புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தினால் அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தின் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஐ.எல்.றிஸ்வான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கொவிட் 19 தொற்றிலிருந்து எமது நாட்டிலுள்ள சகல இனத்தவர்களும் பாதுகாப்பு பெறும் வகைகயில் கொரோனா வைரஸ் எம்மை விட்டு விலகிச் சென்று நாட்டில் அமைதி நிலவுவதற்கான இஸ்லாமிய சமயத்திற்கான தேசிய துஆப் பிரார்த்தனை நிகழ்வு அக்கரைப்பற்று ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதன்போது அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சகி, உதவிப் பிரதேச செயலாளர் ஏ.கே. றொசின்தாஜ், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பறூசா நக்பர், அக்கரைப்பற்று பிரதேசசபை தவிசாளர் எம்.ஏ.றாசிக், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான ஏ.எல்.தௌபீக், ரீ.எம்.றின்சான், கலாசார உத்தியோகத்தர்களான தௌபீக், எச்.எம்.முக்தார், அக்கரைப்பற்று பெரிய ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.சபீஸ் மற்றும் அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.ஹமீட் மௌலவி ஆன்மீக உரை நிகழ்த்தியதுடன், யாசீன், அஸ்மாஉல் ஹூஸ்னா என்பன ஓதப்பட்டன. துஆப் பிரார்த்தனையை கிழக்கிலங்கை அறபிக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.அஷ்ரப் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.




