திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு உயர் தொழில்நுட்ப சுய உதவி கிட் வழங்கி வைப்பு!!!!!
திருகோணமலை மற்றும் கந்தளாய் வைத்தியசாலைகளுக்கு உயர் தொழில்நுட்ப சுய உதவி கிட் வழங்கி வைக்கப்பட்டது.
மருந்துகள் உற்பத்தி மற்றும் தயாரிப்பு விநியோக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஷன்ன ஜயசுமன இன்று (08)! வழங்கி வைத்தார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான கபில அத்துகோரளவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதாகவும், 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த உபகரணம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாத்திரம் இல்லாமல் கந்தளாய் வைத்தியசாலைக்கும் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த இயந்திரம் அதிகளவில் தேவைப்படுவதாகவும் இதனை கருத்திற்கொண்டு இந்த உயர் தொழில்நுட்ப சுய உதவி கிட் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை மொரவெவ பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜகத் வேரகொடவினால் வைத்தியசாலையின் குறைபாடுகள் குறித்து தெரியப்படுத்தப்பட்டதையடுத்து
திருகோணமலை மாவட்டத்தில் மஹதிவுல்வெவ,கோமரங்கடவல, பதவி சிறிபுர போன்ற வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகளை மிக விரைவில் நிவர்த்தி செய்து தருவதாகவும் மருந்துகள் உற்பத்தி மற்றும் தயாரிப்பு விநியோக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஷன்ன ஜயசுமன இதன்போது உறுதியளித்தார்


