Header Ads

Breaking News
recent

2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றம்

 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் இன்று நிறைவுற்றப்பட்டுள்ளது.




ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சேபனை தெரிவித்த பின்னர், இந்தச் சட்டமூலம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சட்டமூலத்தை நிறைவேற்றுவதைப் புறக்கணித்திருந்தது.

இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, வாக்களிப்பு இன்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதுடன், மூன்றாம் கட்ட வாசிப்பின் போதும், திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை பிரதமர் மற்றும் நிதிஅமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவால் 2020 ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.