காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு!!
மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள அலியாஓடை எனும் வயற் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் சந்திவெளி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான காத்தமுத்து ஏரம்பமூர்த்தி (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் வழமைபோன்று வயல் காவலில் ஈடுபட்டிருந்தபோது காட்டுக்குள் இருந்து பிரவேசித்த யானை இவரைத் தாக்கியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சம்பவம்பற்றி கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
