Header Ads

Breaking News
recent

சுகாதார நடைமுறைகளை மீறி பூசை வழிபாடு நடத்திய ஆலயத்திற்கு சீல்!


யாழ்.வடமராட்சி – கம்பர்மலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி வழிபாடுகள் நடத்திய குற்றச்சாட்டில் ஆலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், பூசகர் மற்றும் பூசையில் கலந்துகொண்டிருந்த பக்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை பூசை வழிபாடு இடம்பெற்றது. சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமையினால் சுகாதார பிரிவினர் ஆலயத்திற்கு சீல் வைத்தனர். ஆலயத்திற்குள் 14 நாட்கள் யாரும் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆலய பூசகர் மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்ட பக்தர்கள் தத்தமது வீடுகளில் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.