கோரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த பல விசேட தீர்மானம் !!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாகப் பரவிவரும் கோரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு செயலனியின் அரவசர செயற்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (07) மாவட்ட செயலகத்தில் அவசரமாகக் கூடி பல விசேட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ. லதாகரன், மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, இராணுவ 231 ஆம் படைப்பரிவு அதிகாரி கேணல் எஸ்.பீ.ஜீ. கமகே, உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர், ஏ. மயூரன், கிழக்கு மாகாண கொரோனா தடுப்பு இணைப்பாளர் டாக்டர் எம். அட்சுதன், மாவட்ட தொற்று நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் வே. குணராஜசேகரம், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே. தயாபரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

