5000 கிலோகிராமுக்கும் மேற்பட்ட உலர் மஞ்சள் தொகையுடன் ஆறு பேர் கைது!
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஐயாயிரம் கிலோகிராமுக்கும் மேற்பட்ட உலர் மஞ்சள் தொகையொன்றுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஞ்சள் தொகையொன்றை சட்டவிரோதமாக, இந்தியாவிலிருந்து நாட்டுக்குக் கொண்டுவர முயற்சித்த போதே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே. அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இதேவேளை, மூவாயிரத்து 218 கிலோகிராமுக்கும் மேற்பட்ட மீன்தொகையொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட நால்வரில் இரண்டு இலங்கையர்களும், இரண்டு இந்தியர்களும் உள்ளடங்குவதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
மேலும், கடத்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் உபகரணங்கள் சிலவற்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
