பாகிஸ்தான் – ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டி இன்று!!!!
பாகிஸ்தான் மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் அமைந்துள்ள ராவல்பிண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுவதற்காக ஸிம்பாப்வே அணி பாகிஸ்தானுக்குப் பயணமாகியுள்ளது.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2 க்கு 1 எனும் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் இரு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு 20 தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, ICCயின் இருபதுக்கு 20 தரப்படுத்தலில் பாகிஸ்தான் அணி 7 ஆம் இடத்திலும், ஸிம்பாப்வே அணி 10 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
