மேல்மாகாணத்தில் ஊரடங்கு குறித்து சம்பிக்க ரணவக்க கேள்வி?
மேல் மாகாணத்தை சொற்ப நாட்களுக்கு மாத்திரம் முடக்கி வைப்பது விஞ்ஞானபூர்வமானதா என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, வேறு நாடுகளில் 14, 21 அல்லது 28 நாட்கள் வரை, முடக்கல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சொற்ப நாட்களில் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதானது, ஊரங்கு சட்டம் அமுல்படுத்தாமைக்கு இணையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இவ்வாறான நிலைமையில் தொழில்முறை ரிதியாக சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
