சுவர் இடிந்து வீழ்ந்ததில் எட்டு வயது சிறுவன் பலியாகியுள்ளான்!!
கிளிநொச்சி தொண்டமான் நகர் பகுதியில் இன்றுகாலை தற்காலிக வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் உணவருந்திக்கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் பலியாகியுள்ளான்.

அரசாங்கத்தினால் வீட்டுத்திட்டும் கிடைத்தும் அதனை பூர்த்தி செய்வதற்கு முழுமையான பணம் வழங்கப்படவில்லை. இதனால் அந்த குடும்பத்தினர் நிரந்தர வீட்டுக்கு செல்ல முடியாமல் போய்விட்டது என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

