Header Ads

Breaking News
recent

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட கேரளாக் கஞ்சா : இருவர் கைது!!!!!

(முல்லைத்தீவு நிருபர் தூயவன்) 
மன்னாரில் நேற்று (12) இந்தியாவிலிருந்து மன்னார் ஊடாக இலங்கைக்கு கடத்த முற்பட்ட கேரளாக் கஞ்சாவை மடு பொலிசார் கைப்பற்றியுள்ளனர். 

இவ்வாறு கடத்த முற்பட்ட  கேரளாக் கஞ்சாவைதென் பகுதிக்கு எடுத்துச் சென்ற இரு நபர்கள் மடு பொலிஸ் பிரிவில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டனர். 


மேலும் இது தொடர்பாக தெரியவருவதாவது (11) அன்று புதன் கிழமை மடு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் அடுத்து  மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்புரைக்கமைய உதவி பொலிஸ் அதிகாரி அளுத்கமகே, மடு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ராஐபக்ச, உதவி பொலிஸ் பரிசோதகர் வசந்தகுமார் தலைமையிலான அணியினர் களத்தில் இறங்கியபோது இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது 
Powered by Blogger.