Header Ads

Breaking News
recent

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் சிக்கல் : இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!!!!


(ADMIN)
இலங்கையில் முறையான வேலைத் திட்டங்களை தயாரிக்கும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலைகளை திறக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த மற்றைய பிரதேசங்களில் தரம் 6 முதல் 13 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

ஆனால் கடந்த முறை பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை போன்ற வேலைத்திட்டங்கள் இம்முறை முன்னெடுக்கப்படாதிருக்கின்றது.

இந்நேரத்தில் அங்கு தொற்று நீக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் அது செய்யப்படவில்லை. கொரோனா அச்சத்தில் பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அஞ்சுகின்றனர்.

இதனால் பெற்றோரை தெளிவுப்படுத்தி, பாடசாலைகளில் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வரையில் இப்போதைக்கு சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளுக்கு மாத்திரம் பாடசாலைகளை திறப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
Powered by Blogger.