விவசாய கிணறொன்றில் வீழ்ந்து 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!!!!
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் விவசாய கிணறொன்றில் வீழ்ந்து சகோதரர்களான 2 சிறுவர்கள் இன்று மாலை உயிரிழந்துள்ளனர்.
5 மற்றும் 7 வயதுடைய இரு சிறார்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், உறவினர் ஒருவருடன் வயலுக்கு சென்றபோதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மழைநீரை சேமிப்பதற்காக வெட்டப்பட்ட தற்காலிக குழியொன்றில் வீழ்ந்தே சிறுவர்கள் உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
