Header Ads

Breaking News
recent

நிர்வாக உத்தியோகத்தர் படுகொலை!


மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக் கடமையாற்றும் ஒருவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று (நவ-3) செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இவர் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.


இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பாரிய காயம் காணப்படுகின்றமை அவர் இனம் தெரியாத நபர்களினால் கூறிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்று வரும் சட்ட விரோம மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளமையும் தெரிய வருகின்றது.

தற்போது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Powered by Blogger.