Header Ads

Breaking News
recent

கொழும்பின் சில பகுதிகள் முடக்கம் – இராணுவத்தளபதி சற்று முன்னர் அறிவிப்பு!!!



மேல் மாகாணத்திற்குட்பட்ட சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்தார்.

இதற்கமைய, மட்டக்குளி, மோதறை, புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிரேண்பாஸ், கரையோர பொலிஸ் பிரிவு, பார்பர் வீதி, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெள்ளம்பிட்டி, வாழைத்தோட்டம் மற்றும் பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மேல் மாகாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளைக் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.