Header Ads

Breaking News
recent

Eclat Unites அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!!!!


(Muaadh Marzook)
Eclat Unites அமைப்பின் தலைவர் இஹ்திஸான் மொஹமட் அவர்களின் தலைமையில்  கண்டி மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலின்கீழ் கொரோனா தொற்றுக்குள்ளாகி, தெல்தெனிய கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 120க்கும் மேற்பட்டோருக்குத் தேவையான ரூபா 30,000 பொறுமதியான உலர் உணவுப் பொருட்கள் தெல்தெனிய பிரதான வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் சமிந்த மற்றும் அப்பிரதேச செயலகமான மெததும்பர பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு. விக்ரம ஆகியோரிடம் கையாளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .


மேலும் இந்நிகழ்வு, கண்டி மாவட்ட செயலகத்தின் சமூக சேவை அதிகாரி திரு. நந்தன, தெல்தெனிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் Eclat Unites அமைப்பின் அங்கத்தினர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. 

அத்தோடு அங்குள்ளவர்களுக்குத் தேவையான மேலதிக தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.