LPL கிரிகெட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பம்!
நடைபெறவுள்ள LPL கிரிகெட் தொடருக்கான போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.
LPL எனப்படும் லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில், எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி பிற்பகல் 3.30 இற்கு ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், இரவு 7.30 இற்கு முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கமைய, முதலாவது போட்டியில் Colombo Kings மற்றும் Kandy Tuskers ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அத்துடன், 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இவ்வாறு, 15 நாட்களில் மொத்தமாக 23 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில், போட்டி அட்டவனை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள எமது www.maxtamilmedia.com என்ற இணையளத்தை நாடுங்கள்.
