கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது !!
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1004 ஆக உயர்ந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதில் அக்கரைப்பற்று சுகாதார பிரிவில் மட்டும் 306 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .
கிழக்கு மாகாணத்தில் இதுவரை சம்மாந்துறை, ஒலுவில், சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, காத்தான்குடியில் என 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
திருகோணமலையில் 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன தற்போது வரை 2278 நபர்கள் சிகிச்சை பெற்றுவருவதோடு 1763 நபர்கள் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் - 122 தொற்றாளர்கள்
திருகோணமலை - 66
மூதூர் - 34
கிண்ணியா - 9
தம்பலகாமம் -6
குச்சவெளி - 1
உப்புவெளி - 3
கொமரங்கடவேல -1
சேருவில - 3
அம்பாறை மாவட்டம் - 751 தொற்றாளர்கள் அக்கரைப்பற்று - 306
கல்முனை தெற்கு -139
கல்முனை வடக்கு - 11
அட்டாளைச்சேனை -70
ஆலையடிவேம்பு - 27
சாய்ந்தமருது - 33
திருக்கோவில் -14
பொத்துவில் - 65
சம்மாந்துறை - 14
இறக்காமம் - 23
காரைதீவு - 8
நாவிதன்வெளி - 5
நிந்தவூர் -12
அம்பாறை - 4
உஹன - 8
தமன - 4
பதியத்தலாவ - 4
மகா ஓயா - 1
தெஹியத்தகண்டிய - 3
மட்டக்களப்பு மாவட்டம் - 131 தொற்றாளர்கள்
களுவாஞ்சிகுடி - 20
கோறளைப்பற்று மத்தி - 61
ஏறாவூர் - 10
செங்கலடி - 1
மட்டக்களப்பு - 8
காத்தான்குடி - 15
பட்டிப்பளை - 3
வெல்லாவெளி - 3
ஓட்டமாவடி - 1
ஆரையம்பதி - 2
கிரான் - 2
வாழைச்சேனை -5

