2021 ஆம் ஆண்டு ஜனவரி நாட்டுக்கு சுற்றுலாப் பயண அனுமதி
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுற்றுலாத்துறையை மையப்படுத்திய நெறிமுறைகளை ஜனவரி மாதத்தில் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறை தொடர்பிலான அனைத்து குறைபாடுகளும் சரிசெய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சுகாதார தரப்பினரின் வழிகாட்டலின் அடிப்படையில் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளே நாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.


