300 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் AHRC நிறுவனத்தின் அனுசரனையில்
(திருமலை நிருபர்)
திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள நாளாந்த தொழிலை அடிப்படையாக கொண்ட 300 குடும்பங்களுக்கு அவசியமான உலர்உணவுப்பொருட்கள் AHRC நிறுவனத்தின் அனுசரனையில் நேற்று வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா குறித்த பொருட்களை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களிடம் கையளித்தார்.
குறித்த பொருட்கள் நேற்று முருகாபுரி கிராமசேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நேற்று சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டுதலிற்கமைய இவ்வுலர்வணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

