Header Ads

Breaking News
recent

வயது குறைந்தவர்களுக்கு வாகனங்களை வழங்குவோருக்கு சிறை


(ஹாசிம் சஜித் - இறக்காமம்)

சாரதி அனுமதி பத்திரம் இல்லாத மற்றும் உரிய வயதெல்லையை பூர்த்தி செய்யாதவர்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி வழங்கும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதன்போது, குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அறவிடுவதற்கும் அனுமதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மோட்டார் வாகனங்கள் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 18 வயதிற்கும் குறைந்த சிறுவர்களுக்கும், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கும் அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் தங்களது வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி வழங்கிவருவதாக தெரியவந்துள்ளது. 

இவர்கள் வினோதமான முறையிலேயே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இது குற்றச்செயற்பாடாகும். 

அதனால் இவ்வாறு வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கான வாகனங்களை வழங்கி வரும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Powered by Blogger.